மகாத்மா காந்தியின் வாழ்க்கைக் குறிப்பு - அரிய படங்களுடன்
 
பாகம்: 15
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0


குழந்தைப் பருவம்

கலவரங்களால் சீரழிந்திருந்த பஞ்சாபிலிருந்து காந்திக்கு அழைப்பு வந்தது. பஞ்சாப் சொல்லும் வழியில் டில்லிக்கு அவர் விஜயம் செய்தார். பங்கி காலனியில் முன்பு அவர் தங்கியிருந்த கட்டடத்தில் அகதிகள் வசித்து வந்ததால், இம்முறை பிர்லா மாளிகையில் தங்கலானார். அகதி முகாம்களை அவர் பார்வையிட்டதுடன், தினந்தோறும் பிராத்த்தனைக் கூட்டங்களில் உள்ளமுருக்கும் உபதேசங்களைப் போதித்தார்.

டில்லியில் வகுப்பு ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக அவர், "செய் அல்லது செத்து மடி" என்ற சூத்திரத்தைப் பிரயோகித்தார். டில்லியில் அமைதி ஏற்படுத்தி, மேற்கு, கிழக்கு பஞ்சாபுக்குத் தாம் செல்ல வழி செய்யுமாறு அவர் ஜனங்களைக் கேட்டுக் கொண்டார்.
1947 அக்டோபர் 2உ எழுபத்தொன்பதாவது பிறந்த தினத்தன்று ஏராளமான பேர் காந்தியைத் தரிசித்து வாழ்த்துக் கூறினர்; ஏராளமான ஆசிச் செய்திகளும் வந்திருந்தன. ஆனால் காந்தியோ தம் இதயம் வேதனையால் துடிப்பதாகக் கூறினார். துவேஷமும், கொலையும் மலிந்துள்ள சூழ்நிலையில் தாம் உயிர் வாழ விரும்பவில்லை என்றும் அவர் சொன்னார். அவர் மன்றாடிக் கேட்டுக் கொண்ட பிறகும் ஆங்காங்கே பலாத்கார சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தன. அதனால் 1948 ஜனவரி 13உ முதல் காலவரம்பின்றி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர் அறிவித்தார். பல்வேறு வகுப்பினர் இடையே இதயபூர்வமான ஒற்றுமையை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் என்றும், எவருக்கம் எதிராக உபவாசத்தை ஆரம்பிக்கவில்லை என்றும் அவர் தெளிவு படுத்தினார்.

அண்ணல் உபவாசத்தின் விளைவாக டில்லியில் அதிவிரைவில், அதிசய வகுப்பு ஒற்றுமை மலர ஆரம்பித்தது. அவரது கட்டளைப்படி வகுப்பு ஒற்றுமையைக் காத்து நிற்பதாகச் சகாக்கள் வாக்களித்ததன் பேரில் காந்தி, உபவாசத்தை ஜனவரி 18உ முடித்துக் கொண்டார். அதற்கு இரு தினங்கள் கழித்து, பிராத்த்தனைக் கூட்டத்தில் காந்தி மீது வெடிக்குண்டு வீச ஒரு முயற்சி நடந்தது.

இம்முறை உண்ணாவிரதம் அவரை ரொம்பவும் அசத்திவிட்டது. பிராத்தனைக் கூட்டத்துக்கு அவரை 'ஸ்டிரெச்சரில்' தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது. பிர்லா மாளிகைக் காம்பவுண்டில் பிராத்திதனைக் கூட்டம் நடந்து வந்தது. ஜனவரி 22உ முதல் அவர் பிராத்த்தனைக்கு நடந்து செல்ல முடிந்தது.
ஜனவரி 27உ முஸ்லிம் மகான் ஒருவரின் ஜன்மதினக் கொண்டாட்டம் நடந்தது. அன்று மெஹ்ராலி மசூதிக்குக் காந்தி சென்று ஹிந்து - முஸ்லிம்களின் கலப்புக் கூட்டத்தில் உபதேசம் செய்தார்.

சந்தியை ஏற்படுத்தவும், அகதிகளின் துயரைத் துடைக்கவும் காந்தி அல்லும் பகலும் பாடுபட்டார் "நான் ஆண்டவரின் திருவுளப்படி வாழ்கிறேன். அவரது ஆக்ஞைப்படி செயல் புரிகிறேன். விரும்பினால் என்னை அவர் கொல்ல முடியும்" என்று காந்தி கூறினார்.
ஜனவரி 30உ மக்களை நோக்கிக் கூப்பிய கரங்களுடன் பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு ஹிந்து வெறியன் காந்தி மீது கைத் துப்பாக்கியால் சுட்டான்; அவர் திருமேனியில் மூன்று தோட்டாக்கள் பாய்ந்தன. "ஹே ராம்" என்று கூவிக் கொண்டு அண்ணல் விழுந்தார். எங்கும் இருள் சூழ்ந்தது. உலகெங்கும் துக்கத்தின் அடையாளமாக கொடிகள் தணிக்கப்பட்டன.
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
 
Website Designed by Gandhi Iyakkam, Thanjavur