காந்திஜி தென் ஆப்பிரிக்க சிறையில் இருந்தபோது தயாரித்த செருப்புகள். இவற்றை தென் ஆப்ரிக்க பிரதமர் ஸ்மட்ஸுக்கு அவர் பரிசளித்தார். மஹாத்மா தயாரித்த ஜோடிகளை அணியத் தமக்கு யோக்கியதை இல்லை என்று பிரதமர் பதலிளித்தார். |
புது டில்லி பிர்லா மாளிகையில் உள்ள புல்வெளி - இங்கேதான் மகாத்மாஜி கடைசிப் பிராத்த்தனைக் கூட்டத்தை நடத்தினார்.
|
காந்திஜி தரித்த இரு தொப்பிகள்: ஒன்று பர்மா பிரதம மந்திரி யு.நு.தந்த பரிசு; மற்றொன்று நவகாளி குடியானவர் ஒருவர் அளித்தது. |
மகாத்மாவின் பூலோக ஆஸ்திகள் - சாப்பாட்டுக் கிண்ணங்கள், மரக் கரண்டியும் முள் குருவியும், பிரசித்திவாய்ந்த பீங்கான் குரங்குகள்; அவரது டயரி; பிரார்த்தனைப் புஸ்தகம்; கடிகாரம், படிககம், காகிதம் கிழிக்கம் கத்திகள், பாதரட்சைகள். |