மகாத்மா காந்தி வரலாற்றுக் குறிப்புகள்
அரிய படங்களுடன்...
முகவுரை

மஹாத்மா காந்தியின் எண்பது வருஷ வாழ்க்கையில் எத்தனையோ புதிய புதிய கட்டங்கள் உண்டு. அவரைப் போலப் பெருமையுள்ள வேறு எந்த மனிதரின் வாழ்க்கையிலும் இத்தனை கட்டங்கள் இருந்ததில்லை. நடுத்தர வர்க்க வைஷ்ணவக் குடும்பம் ஒன்றில் அவர் பிறந்தார். பள்ளியில் சேரும் வரை அதே சூழ்நிலையில் வளர்க்கப்பட்டார். அக்கால முறைப்படி கல்வி பயின்றார். அப்போதெல்லாம் தமது வர்க்கக் குழந்தைகளைப் போலவே உண்டார், உடைதரித்தார், வாழ்ந்தார். பின்னர் அவர் இங்கிலாந்துக்குப் படிக்கச் சென்றார். அந்நாட்டு நிலவரத்துக்கு ஏற்பத் தம் உடை மோஸ்தரை மாற்றிக் கொண்டார். ஆனால் உணவிலும், வேறு சில விஷயங்களிலும் அவர் இளம் பிராயத்தில் கற்றுக் கொண்ட போதனையிலிருந்து பிறழாமல் நடந்தார். பாரிஸ்டராகி இந்திய திரும்பியதும், வக்கீல் தொழிலில் புதிதாகப் பிரவேசிக்கும் மற்ற எல்லோரையும் போலவே அவரும், சங்கடங்களை அனுபவித்தார். வக்கீல் என்ற முறையில் ஒரு கட்சிக்காரருக்கு உதவி செய்வதற்காக அவர் தென் ஆப்பிரிக்காவிற்குச் சென்றார். ஆயினும் அங்க அவர் பல வருஷங்கள் தங்க வேண்டியதாயிற்று. ஏனெனில் அங்கு இந்தியர்களின் வாழ்க்கை நிலைமை, அவர்கள் நடத்தப்பட்ட முறை ஆகியவை காரணமாக அவர் இந்தியாவிற்குத் திரும்பாமல் அவர்களுக்குச் சேவை செய்ய வெண்டியது அவசியமாயிற்று. ஆட்சியாளருடன் நடத்திய போராட்டத்தின் விளைவாக அவருடைய வாழ்வில் மாபெறும் மாறுதல் ஏற்பட்டது. அவர் காவியுடை தரியாத சந்நியாசியாக இந்தியாவுக்குத் திரும்பினார். இந்தியா திரும்பியப்பின் அவர் பாரிஸ்டரைப் போல் உடுப்பு அணியவில்லை; பழைய கத்தியவார் பாணியிலேயே அணிந்தார். ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தியபோது அவரிடம் மற்றொரு மாறுதல் தோன்றியது. நாட்டின் பரம ஏழைக்குச் சமானமான வெளித்தோற்றத்தை அவருக்கு அளித்த மாறுதல் அது. அப்போது முதல், ஈசவர நாம உச்சாரணத்துடன் உலகை நீத்தது வரை அவர் ஒற்றை வேஷ்டியையே உடுத்திவந்தார். 1931ல் இங்கிலாந்தில் சிறிது காலம் தங்கிய பொழுது கொடிய குளிரினால் கூடி அவரை மாற்ற முடியவில்லை. இவ்விதம் அவரை வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில், சித்திரத்தில், பார்ப்பது மிகக் கவர்ச்சியாகவும் அறிவூட்டுவதாகவும் இருக்கிறது. ஆனால் வெறும் உடை மாற்றங்கள் மாத்திரமன்றி அவருக்கே உரிய அலாதித் தோற்றங்களும், அவரது ஆத்ம சொரூபத்தின் புறக்காட்சியும் கவனத்தை ஈர்க்கின்றன. இப்புத்தகத்தில் உள்ள போட்டோக்களில் இவற்றை யெல்லாம் காணலாம். அவரது ஜீவியம், உபதேசங்கள் பற்றி எவ்வளவோ எழுதப்பட்டிருக்கிறது, இன்னும் எழுதப்படுகிறது. அவரைப் பற்றி அவரும் மற்றவர்களும் எழுதிய, எழுதுகின்ற விஷயங்களுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும் அவரது வாழ்க்கைச் சித்திரங்கள்.

ஆகவே அவருக்குப் பணிவார்ந்த அஞ்சலியாக, இந்திய அரசாங்க செய்தி - ஒலி பரப்பு இலாகா வெளியிட்டுள்ள இப்பிரசுத்தை வரவேற்கிறேன்.

ராஷ்டிரபதி பவனம், ராஜேந்திர பிரஸாத்
புது டில்லி,
ஜனவரி 20, 1954.

வ.எண்.
பொருள்
1
பதிப்புரை: பப்ளிகேஷன்ஸ் டிவிஷன்
2
முகவுரை
3
முன்னுரை
4
அரிய படங்களுடன் மகாத்மாவின் வரலாற்று குறிப்புகள்
5
படங்கள் தொகுப்பு

6

நன்றி அறிவிப்பு

Website Designed by Gandhi Iyakkam, Thanjavur